தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வி.சி.க தொகுதி துணைச் செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்து கொண்டு தூத்துக்குடி சாமுவேல்புரம் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்கும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு 5 கிலோ அரிசியும், சேலையும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதனால் இவர் வருகையை ஒட்டி திமுக இளைஞரணியினரும், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினறும் இந்த பகுதியில் குவிந்ததால் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருவிழா கோலம் பூண்டது.
மேலும், இவ்விழாவில் சாதனையாளர்களுக்கு அம்பேத்கர் பெயரில் விருதுகளை ஜோயல் வழங்கினார். மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வருகிறார் மாநில வாி சரக்கு மற்றும் சேவை வாி அலுவலர் ராஜதுரையும் அம்பேத்கர் விருதை வழங்கி சிறப்பு செய்தார்
முன்னதாக அண்ணா திருமண மண்டபம் முன்பு ஜோயலுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி வழிநெடுக மேளதாளம் முழங்கி வருகின்ற வழியில் இருக்கின்ற கோவில்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். எஸ் எஸ் மாணிக்கபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். வழியெங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக செல்வி ஜெயா பிரதீஷா குழுவினர் வரவேற்பு நடனம் ஆடினர். அம்பேத்கர் வரலாறு பேசி விழாவை மாணவி பிரித்திகா வேல்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்வில் திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் தமிழகம் எங்கும் பல்வேறு சமூக நல அமைப்புகளுக்கு நல உதவிகளை வழங்கி வருகிறார் இந்த நிலையில் அவரை கௌரவித்து மேடையில் வைத்து வீரவால் வழங்கப்பட்டது அம்பேத்கர் இளைஞர் அணி முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி சுமையா பில்டர் சுலைமான், மெஜிபில்டர்ஸ் ஸ்டீபன், கேபிள் டிவி ஆபரேட்டர் யோவான், பாக்கியராஜ், டான் இசக்கிமுத்து, சிமியோன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்வில் இளைய வேந்தன் இளைஞர் ரத்த தான அறக்கட்டளை அமைப்பாளர் ஷேக் முகமது வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் நடராஜ், சுரேஷ்குமார், ராஜன், முனியசாமி, ஸ்டீபன் ஜெபராஜ், கருப்புசாமி, ஜோஸ்வின், ராஜா, தமிழரசன், வெள்ளத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் தூத்துக்குடி கியூ பிரான்ச் காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைக்கவசம் வழங்கினார். நிகழ்வில் அம்பேத்கர் அறக்கட்டளை தாமோதரன், வி எம் பிரமோட்டர்ஸ் பிரேம் ஆதித்தன், அரசு, மருத்துவர் கார்த்திக், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால் துரை, ஓட்டப்பிடாரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஸ்கர்,தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி சார்லஸ், தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி அர்ஜுன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி பவர், ரவி நிலவளவன், மாநில செயற்குழு உறுப்பினர் தொழிலாளர் விடுதலை முன்னணி விடுதலை சிறுத்தைகள் கட்சி, செல்வகுமார், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி மாநகர துணை அமைப்பாளர் பிரவீன்,மீள விட்டான் ரமேஷ்,சோட்டையின் தோப்பு ஊர் கமிட்டி செல்வகுமார்,கருப்பசாமி, ராஜமாணிக்கம், லதா, அந்தோணி, மதன், நிதி, ஹனிராஜ்,அந்தோணி, ரஜினி செல்வம் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தனர். முடிவில் நன்றியுரை ஆற்றினார். மதன் செல்வகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ரூபன், கோகுல், இந்த நிகழ்வில் அம்பேத்கார் இளைஞர் அணி தாஸ்,பாக்யராஜ், சுரேஷ், தாசன், திருப்பதி, ஆரோக்கியதாஸ், ஆரோக்கியராஜ், ரவீந்திர குமார், அரசகுரு, மணிகண்ட மூர்த்தி, நேவிஸ், யோகேஷ், கார்த்திக், ராஜா, கங்காதரன், சரவணன், கிளாட்வின் தினேஷ் சரவணன், ராஜா, பாலு, ரமேஷ், முத்துக்குமார், சக்தி அதிமுக அந்தோணி என்ற கபிலன், ஜெயராஜ் காதர் மைதீன், அருண், பாரத், சந்தனகுமார் முத்துக்குமார்,சத்திய பிரபு, பிரகாஷ் மெது, சுப்பிரமணியன், ஜெய்னுலாப்தீன்,முகமது நூர்தீன்,அருள் விஜய், ஆசிப்,முத்துப்பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்