இளைஞர்களின் பாதைகளை மாற்றிட போதை பழக்கத்தை விரட்டிட பாரம்பரிய கலைகள் மூலம் விழிப்புணர்வு செய்திடுவோம்…..

Spread the love

பயங்கரவாதத்தை மிஞ்சியது போதை பழக்கம், பிறரால் உருவாகக்கூடிய பயங்கரவாதத்தை கூட பாதுகாப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தி விட முடியும், ஆனால் போதைப் பழக்கம் அப்படியல்ல தடுப்பு நடவடிக்கைகள் மூலம் எவ்வளவு தான் தடுத்தாலும் உலக அளவில் போதையில் பொருள் பயன்பாடு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது. மது குடிக்காதே, கஞ்சா புதைக்காதே, போதைப்பொருளை எடுத்துக் கொள்ளாதே, என விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் முடியுமே தவிர அடக்கு முறையால் அடக்கி விட முடியாததாக இருக்கிறது. போதைப் பழக்கம் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல் போதை பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும் அதையும் தாண்டி போதைக்கு அடிமையாகி விட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய உதாரணம்.

போதை தன்னை மட்டும் கொல்லாமல் தான் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து விடும் வீட்டுக்கு மட்டும் இன்றி நாட்டுக்கும் கேடாக அமைந்து விடும் என்பதால் தான் போதையை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றனர். உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கு மேற்பட்டவர்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி இருக்கின்றன. என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பதும் போதைக்கு அடிமையானவர்களில் 85 சதவீதம் நபர்கள் படித்தவர்கள் என்பதும், 75% பேர் இளைஞர்கள் என்பதும் வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. மது, கஞ்சா, பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப் பொருள்கள் பல விதங்களில் புழக்கத்தில் உள்ளன.

உலக வர்த்தகத்தில் பெட்ரோல் ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, போதை பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணப்புழக்கம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பது ஆய்வுகள் கூறி வருகிறது. 12 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம் வயது பருவத்தினர் அதிகம் பேர் போதை பொருள் பயன்பாட்டை தொடங்கும் நிலையில் இருக்கிறார்கள். 18 வயது முதல் 25 வயது உடைய இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை அடையும் நிலை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள், சுமார் மூன்று புள்ளி ஒரு கோடி பேர் கஞ்சாவாம், 60 லட்சம் பேர் ஒபியாயிடும்,1.18 பேர் தற்போது மயக்க மருந்துகளை மருத்துவமல்லாத பயன்பாடு போதைக்காக பயன்படுத்துகின்றனர். என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. 8.5 லட்சம் பேர் போதை ஊசி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் போதை பொருள்களின் பன்முகத் தாக்கங்களின் தீவிரத்தை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் போதை பொருள் கடத்தல் அவற்றை தடுப்பது குறித்தும் போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குதல் ஆலோசனை வழங்குதல் உரிய சிகிச்சை அளித்தல் போதை பொருள் சார்ந்த நபர்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றன

இளைய சமுதாயத்தினர் இடையே போதை பொருள் ஊடுறுவதலை தடுக்கும் விதமாக பள்ளி கல்லூரிகளில் போலீஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மூலம் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது இறப்பினும் போதை பொருள் கடத்தல் பயன்பாடு என்பது குறைந்தபாடில்லை போதை பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை அதனால்தான் ஒலிக்கும் நோக்கத்தை உலக நாடுகள் வலியுறுத்தும் விதமாக ஜூன் 26ஆம் தேதி போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய போதை பொருள் பிரச்சனை எதிர்த்து போராடுவதற்கான நமது முயற்சிகளை விரிவு படுத்த வேண்டும் கூட்டு நடவடிக்கை மூலம் ஆரோக்கியமான நிறைவான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று போதைப் பொருளில் ஒழிப்பு தின செய்தியாக எல்லோரும் அறிவிக்க வேண்டும் மக்கள் நலன் கருதி போதை பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் ஒழிக்க அரசு முன்வர வேண்டும் போதைப் பொருள் கடத்துவருக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் போதைப்பொருள் பயன்படுத்தினால் நிலைகுலைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் இவற்றிற்கெல்லாம் மேலாக உயிரைக் கொல்லும் போதை இன்னும் தேவைதானா என்று அதை பயன்படுத்துவோர் நினைக்க வேண்டும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் மனதில் கொண்டு போதைப் பொருளை தொடமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும் போதை என்னும் பாதை என்றைக்குமே தவறான இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை உணர்ந்தால் நாமும் நாடும் நலம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *