தென் மாவட்டங்களில் பிரபலமான கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையின் சென்னை கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடியில் ஜவுளி மற்றும் தங்க நகை வியாபாரம் செய்து வரும் கே. சின்னத்துரை அன் கோ புதிய கிளை சென்னை தாம்பரம் அருகிலுள்ள செம்பாக்கத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கடை உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிருஷ்ணன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
முதல் விற்பனையை கடை உரிமையாளர்கள் செல்வராஜ் நாடார் மற்றும் திருமணி நாடார் ஆகியோர் வழங்க ஏரல் ராமகிருஷ்ணன் நாடார் பாத்திரக்கடை உரிமையாளர் ராமநாதன் பெற்றுக் கொண்டார்.
திறப்பு விழாவில் போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் போத்திராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., செம்பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் மகேஸ்வரன், தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டல தலைவர் பிரதீப் சந்திரன், தாம்பரம் வட்டார நாடார் சங்கத் தலைவர் ரசலையன், சென்னை ராஜகீழ்ப்பாக்கம் சீனிவாசகா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர்கள் முத்துமாலை மற்றும் குமரன், தூத்துக்குடி தொழிலதிபர் சுரேஷ் குமார் சென்னை வியாபாரிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா அன்று ஜவுளி வாங்கிய அனைவருக்கும் 10% சிறப்பு தள்ளுபடி, சிறப்பு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கே. சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.