தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷன் வசூல் அதிகரிப்பு? - ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு *9% முதல் 11% வரை வசூலா?

தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷன் வசூல் அதிகரிப்பு? - ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு *9% முதல் 11% வரை வசூலா?

தூத்துக்குடி மாநகராட்சியில் கமிஷன் வசூல் அதிகரிப்பு? - ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு *9% முதல் 11% வரை வசூலா?

தூத்துக்குடி:

தமிழகத்தில் லஞ்சம் இல்லாத தூய்மையான ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் கமிஷன் வசூல் அதிகரித்து விட்டதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

*ஒப்பந்ததாரர்கள் கூறுவது என்ன?*

மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பொறியியல் பிரிவில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் நேரில் பார்வையிட்டு கையெழுத்திட வேண்டும் என்றால் 3 சதவீதமும், பணிகளை பார்வையிடாமல் அலுவலகத்தில் அமர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்றால் 5 சதவீதமும் கமிஷனாக கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் ஒப்பந்ததாரர் ஒருவர் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

*9% முதல் 11% வரை வசூலா?*

மேலும், அந்த அதிகாரிக்கு அடுத்த நிலையில் உள்ள 5 அதிகாரிகளுக்கு தலா ஒவ்வொரு சதவீதம் என கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.

இதனால் மொத்தமாக மாநகராட்சியில் பொறியியல் துறையில் 9 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை கமிஷனாக வசூல் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்பெல்லாம் இது 5 முதல் 6 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது 9 முதல் 11 சதவீதமாக உயர்ந்துவிட்டதாகவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

*அரசின் கவனத்திற்கு கோரிக்கை:*

நகராட்சி நிர்வாகத் துறை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. அவர்களின் விளக்கம் கிடைத்ததும் வெளியிடப்படும்.

*குறிப்பு: இது ஒப்பந்ததாரர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு மட்டுமே. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.*