தமிழகம் முழுவதும் 8 லட்சம் மாணவிகள் புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருகிறார்கள். என மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
across-tamil-nadu-8-lakh-female-students-are-benefiting-from-the-pudhumai-penn-scheme-receiving-one-thousand-rupees-every-month-minister-geetha-jeevan-said-this-while-distributing-free-bicycles-to-the-students
தமிழகம் முழுவதும் 8

லட்சம் மாணவிகள் புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருகிறார்கள். என மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 176 மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசுகையில் தமிழகத்தில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் நான் முதல்வன் திட்டம் என்னும் எழுத்தும் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கு படிப்போடு மாணவ மாணவியர் கல்வியை நிறுத்தாமல் உயர் கல்வியும் கற்க வேண்டும் என்ற வழியில் தான் புதுமைப் பெண் திட்டமும் தமிழ் புதல்வன் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீதமான பேர் தற்போது உயர் கல்வி கற்று வருகிறார்கள். புதுமைப் பெண் திட்டம் மூலமாக தமிழக முழுவதும் கல்லூரியில் சேரக்கூடிய மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது இதுவரை தமிழகம் முழுவதும் 8 லட்சம் மாணவிகள் இந்த புதுமைப் பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் பெற்று வருகிறார்கள் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் பெர்னட் மேரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் ஜேசையா, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் டென்சிங், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பகுதி பிரதிநிதி மாியதாஸ், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கமலி, மணி, அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
admin