40 ஆண்டு கால காட்டிற்கு விஇ ரோடு சண்முகபுரம் வழியாக ஜாா்ஜ் ரோடு புதிய வழித்தடம் மேயா் ஜெகன் பொியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு

the-public-praises-mayor-jegan-periyasamy-for-the-new-road-connecting-the-40-year-old-forest-area-to-george-road-via-ve-road-shanmugapuram

40 ஆண்டு கால காட்டிற்கு விஇ ரோடு சண்முகபுரம் வழியாக ஜாா்ஜ் ரோடு புதிய வழித்தடம் மேயா் ஜெகன் பொியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு

     தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுபோல வாகனங்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் வாகனங்கள் செல்வதற்கான வசதிகள் தொடர்ந்து செய்து தர வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோாிக்கையும் வந்து கொண்டே இருக்கிறது அதை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சி நிா்வாகமும், செய்து வருகின்றன. 

விஇ ரோடு சண்முகபுரம் பெருமாள் தெரு பகுதியில் பணங்காடு என்று ஒன்று இருந்து வந்தது அதில் இருந்த வழித்தடத்தில் சிலா் பய உணா்வோடு சென்று வந்ததை பொதுமக்கள் சாலையும் மின்விளக்கும் அமைத்து தரக்கோாி கோாிக்கை வைத்ததையடுத்து பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தததை யடுத்து பொதுமக்கள் மேயா் ஜெகன் பொியசாமிக்கு பாராட்டு தொிவித்தனா். இந்நிலையில் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் இந்த புதிய வழித்தடம் சுமாா் 40 ஆண்டுகளாக அந்த காலத்தில் பணங்காடு என்று எல்லோராலும் கூறப்பட்ட பகுதி ஓத்தையடி பாதையாக இருந்த வந்த காலத்தில் பலா் பய உணா்வோடு சென்று வந்த நிலையில் சில தேவையற்ற செயல்களிலும் சிலா் ஈடுபடுகிறாா்கள். இதற்கு நல்ல வழித்தடம் அமைத்து மின்விளக்குகளும் அமைத்து இலகுரக இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அமைத்து தர வேண்டும் என்று கோாிக்கை வைத்ததையடுத்து அதை முழுமையாக நிறைவேற்றி கொடுத்ததின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஜாா்ஜ் ரோட்டிலிருந்து சண்முகபுரம் வழியாக வந்து இந்த பாதையில் பிராதான மெயின் சாலையாக விஇ ரோட்டிற்கு பொதுமக்கள் எளிதில் வந்து விடலாம் சுற்றி வரவேண்டிய அவசியமில்லை. அதே போல் இங்கிருந்து அங்கு சென்று விடால் இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இதே போல் 

    மாநகராட்சிக்குட்பட்ட மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த முதியோர்களிடம் சாலைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக விபரங்களை கேட்டறிந்த நிலையில் மேயர் ஜெகன் பொியசாமி மீளவிட்டான் பகுதிக்கு வருகை தந்தார். அதன் பிறகு மீளவிட்டானிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று காரை நிறுத்தி காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றார். அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்களிடம் சாலை எப்படி அமைப்பது என்ற விபரங்களை கேட்டு அறிந்தார். சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பகுதிக்குள் நடந்தே சென்று சாலை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டு ரயில்வே பாலம் மற்றும் குகைக்குள் சென்று பார்வையிட்டு சுமார் இரண்டு மணி நேரம் நடந்து சென்று காட்டுப்பகுதிக்குள் சாலை அமைப்பதை கண்டுபிடித்ேதன் கதிர்வேல் நகர் கடைசி பகுதியிலிருந்து மீளவிட்டான் செல்வதற்கும், அதுபோல கதிர்வேல் நகரிலிருந்து மீள விட்டான் பகுதி வழியாக மடத்தூர் செல்வதற்கான சாலையையும் கண்டுபிடித்தேன்.. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் இரு புறமும் உள்ள உடை மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சாலை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வாகனங்களில் வரும்  மக்கள் நகர் பகுதிக்குள் வராமல் புறநகர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

   அங்கு சாலை அமைக்கப்பட்டால் எப்படி அமைப்பது என்ற விபரங்களையும் ஊர் பொதுமக்களிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் கேட்டறிந்து ஆரம்ப காலத்தில் மாட்டுவண்டி சாலையாக இருந்துள்ளது. மங்கம்மா சாலையாகவும் இருந்துள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி அந்த சாலையை பயன்படுத்தி தான் வருகிறோம் மீளவிட்டான் மக்களின் கோரிக்கையை ஏற்று கதிர்வேல் நகரில் இருந்து மீள விட்டானுக்கும், மீள விட்டானிலிருந்து மடத்தூருக்கும் சென்றுவிடலாம். மதுரை செல்லும் வாகனங்கள் பைபாஸ் வழியாக செல்வதற்கான வாய்ப்பை 40 வருடங்களுக்குப் பின்பு நான் 3 கிலோமீட்டர் 2 மணி நேரம் காட்டுப்பகுதிக்குள் நடந்தே சென்று கண்டுபிடித்து தூத்துக்குடி மக்களின்  போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நகர் பகுதிக்குள் வாகனங்கள் வராமல் புறநகர் பகுதி வழியாக பைபாஸ் சாலை செல்வதற்கு அதிரடியாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன்.. மேலும் அதன் அருகிலேயே சிப்காட் நிறுவனம் சாலை அமைத்து கேட் போட்டு மூடி வைத்துள்ளது. அந்த சாலையை உடனடியாக திறப்பதற்கு சிப்காட் நிர்வாகத்திடம் பேசி மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரப்படும் இதே போல் புதுக்கிராமத்திலிருந்து தாமோதநகா் பெருமாள் தெரு வரும் வகையிலும் மீனாட்சி புரத்திலிருந்து எட்டையாபுரம் சாலை செல்லும் வகையில் புதிய வழித்தடத்தை உருவாக்கி கொடுத்து போக்குவரத்துநொிசலுக்கு தீர்வு கண்டுள்ளோம்.இந்த வழித்தடத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள ேவண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா். 

     இனி வாகன ஓட்டுநர்கள் எந்தவித சிரமமும் இன்றி கதிர்வேல் நகர் பகுதியில் இருந்து மடத்தூர் பைபாஸ் சாலைக்கு இந்த சாலையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை உடனடியாக அமைக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து மீளவிட்டான் பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியை பாராட்டினார்கள். 

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், திமுகவை சேர்ந்த தேவபிச்சை, கணேசன், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பொதுமக்கள் உடனிருந்தனா்.