தூத்துக்குடி வீ த லீடர்ஸ் தமிழன்டா கலைக்குழு, இயக்கம் மற்றும் நெல்லை ஹெல்தி ஃபை வெல்நஸ் சென்டர் இணைந்து 15 நாட்கள் இலவச பாத சிகிச்சை முகாம்

தூத்துக்குடி வீ த லீடர்ஸ் தமிழன்டா கலைக்குழு, இயக்கம் மற்றும் நெல்லை ஹெல்தி ஃபை வெல்நஸ் சென்டர் இணைந்து 15 நாட்கள் இலவச பாத சிகிச்சை முகாம்

தூத்துக்குடி வீ த லீடர்ஸ் தமிழன்டா கலைக்குழு, இயக்கம் மற்றும் நெல்லை ஹெல்தி ஃபை வெல்நஸ் சென்டர் இணைந்து 15 நாட்கள் இலவச பாத சிகிச்சை முகாம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இலவச பாத சிகிச்சை மற்றும் அழுத்த தெரபி முகாம்கள் (Foot Reflexology / Pulse Therapy) அவ்வப்போது தொண்டு நிறுவனங்கள், மருத்துவ மையங்கள் மற்றும் சமூக அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வருகின்றன.

வீ த லீடர்ஸ் தமிழன்டா கலைக்குழு, இயக்கம் மற்றும் நெல்லை ஹெல்தி ஃபை வெல்நஸ் சென்டர் இணைந்து நடத்தி வருகிறது. இன்று வீ த லீடர்ஸ் தூத்துக்குடி நிர்வாகிகள் கின்ஸ் அகடாமி உரிமையாளர் பேச்சுமுத்து தலைமை தொடங்கி வைத்தார். உமரி சத்திய சீலன், ஜெ. ஜெ நகர் முத்து கிருஷ்ணன், அத்தி மரப்பட்டி விவசாயி ஜோதிமணி லயன் சின்னதங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழன்டா கலைக்குழு இயக்கத் தலைவர் கலைச்சுடர் மணி ஜெகஜீவன் ஒருங்கிணைப்பு செய்தார். பினோலா நன்றி கூறினார். முகம் காலை 9:30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெறும் ஒரு நபருக்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாமில் ஆரோக்கியமான வாழ்வுமுறை மற்றும் பாத தெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

15 நாட்கள் இலவச தெரப்பி முகாம் நடைபெறுகிறது.

 பொதுமக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலம் பெரும் வகையில் 15 நாட்கள் தொடர்ந்து இலவச பாத சிகிச்சை முகாம், தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் ராஜ் இல்லத்தில் நடத்தப்படுகிறது. பாதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 15 நாட்களுக்கு இந்த இலவச பாத சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

பாத அழுத்த சிகிச்சையின் நன்மைகள் (Benefits of Foot Reflexology):

பாதங்களில் உள்ள நரம்புப் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் உடலின் பல ஆரோக்கிய குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும்.

• வலி நிவாரணம்: முதுகு வலி, கால் வலி, மூட்டு வலி மற்றும் கழுத்து வலிகளைக் குறைக்க உதவுகிறது.

• இரத்த ஓட்டம்: உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

• மன அழுத்தம்: மன அழுத்தத்தைக் குறைத்து, நிம்மதியான தூக்கத்தைத் தூண்டுகிறது.

• சர்க்கரை நோய்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத மரத்துப்போதல் மற்றும் புண்களைத் தடுக்க (Diabetic Foot Care) இந்த முகாம்கள் பெரிதும் உதவுகின்றன.