அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி – பல்வேறு தரப்பினர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

Spread the love


தூத்துக்குடி,
முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான டாக்டர் கலைஞர், அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்க்கு உறுதுணையாக இருந்த திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை முகாம் இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சந்திப்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், திமுக மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ்; திமுக மாநகர ஆதி திராவிட நலஅணி தலைவர் முருகேசன், மகாத்மா காந்தி கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், ஜவஹர்லால் நேரு சமூக சேவை மையம் ஜவஹர், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர்; விஜயசங்கர், அரசு சமூக ஆர்வலர் அருந்ததி, அசோகா அறக்கட்டளை ஜெயவீரதேவன், சோலையப்பன், வீரமணி, அருந்ததியர் முன்னேற்ற சங்க செயலாளர் சங்கரன்;, அருந்ததியர் முன்னேற்ற சங்க பொருளாளர் ராமசந்திரன், அருந்ததியர் முன்னேற்ற சங்க துணை செயலாளர் நீலமேகம், அருந்ததியர் முன்னேற்ற சங்க துணை தலைவர் கணபதி, சமூக ஆர்வலர்கள் அண்ணாநகர் பால்ராஜ், தருவை கருப்பசாமி, சசிதரன், திமுக பிரதிநிதிகள் ராமமூர்த்தி, கார்த்திக், அருந்ததியர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளர் முருகன், அருந்ததி முன்னேற்ற சங்க மகளிர் அணி செயலாளர் சுதாராணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *