தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (லேட்) மகன் அருண் வேல் இவர் தேவர் புரம் ரோட்டில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்தார். இவரது கடை வியாபாரத்திற்காக கே வி கே நகர் பகுதியில் உள்ள சண்முகம் மகன் ராமரிடம் ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் 3/4/ 2020 அன்று கடன் பெற்றுள்ளார். அவர் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதனை அடுத்து சண்முகம் மகன் ராமர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜலதி, அருண்வேலுக்கு ஒரு வருட கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஒரு மாத காலத்திற்குள் ரூபாய் மூன்று லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉 *மற்றொரு காசோலை மோசடி வழக்கு : தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (லேட்) மகன் அருண் வேல் இவர் தேவர் புரம் ரோட்டில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்தார். இவரது கடை வியாபாரத்திற்காக தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் வசிக்கும் ரத்தின சபாபதி மகன் அம்பிகை பாலன் என்பவரிடம் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் 1/6/2020 அன்று கடன் பெற்றுள்ளார். அவர் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதனை அடுத்து ரத்தின சபாபதி மகன் அம்பிகை பாலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜலதி, அருண்வேலுக்கு ஒரு வருட கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஒரு மாத காலத்திற்குள் ரூபாய் 2லட்சத்து 8 ஆயிரத்து 250 வழங்க வேண்டும். கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉 *மற்றொரு காசோலை மோசடி வழக்கு* : தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ் (லேட்), மகன் அருண் வேல் இவர் தேவர் புரம் ரோட்டில் ஏ.எஸ் கிரானைட் டைல்ஸ் கடையை நடத்தி வந்தார். இவரது கடை வியாபாரத்திற்காக தூத்துக்குடி புஷ்பா நகர் பகுதியில் வசிக்கும் பிரவீன் அந்தோணி ராஜ் என்பவரிடம் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் 3/4/2020 அன்று கடன் பெற்றுள்ளார். அவர் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதனை அடுத்து பிரவீன் அந்தோணி ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜலதி, அருண்வேலுக்கு ஒரு வருட கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஒரு மாத காலத்திற்குள் ரூபாய் 4லட்சத்து 30 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த மூன்று வழக்குகளிலும் தூத்துக்குடி பிரபல வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் குற்றவாளிக்கு எதிராக ஆஜராகி வாதத்தை நிறைவு செய்தார்