தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டி, கல்வி ஊக்கத்தொகையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி வழங்கினார்.
முதல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 25 ஆயிரம், இரண்டாவது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 15 ஆயிரம், மூன்றாவதாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகப் பையைக் கனிமொழி எம்.பி வழங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பல்வேறு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிாியர்கள் ஆசிாியர்கள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.