தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட நிர்வாககுழு வைச் சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம் பகவத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் இளம்பகவத் உறுதியளித்தார். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்து ெபற்றனர்.
நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், குமார், மாாிராஜா, கண்ணன், காா்த்திகேயன், செந்தில்முருகன், இருதயராஜ், ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.