தூத்துக்குடி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகாித்தாா்.
aiadmk-candidate-ct-chellapandian-canvassed-for-votes-at-a-mosque-in-thoothukudi
தூத்துக்குடி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகாித்தாா்.
தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெற்றது.. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பள்ளிவாசலில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த செல்லப்பாண்டியன் தமிழகம் போதை இல்லாத மாநிலமாக மாற இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தருமாறும், இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து இஸ்லாமியர்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அவருக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அதிமுக நிா்வாகிகள் மைதீன், அசன், நவ்சாத், அபுதாஹிா், ராஜகோபால் ஜீவாபாண்டியன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
tamilanda