தூத்துக்குடியில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களில் 19 பேர் சுயட்சையாகவும், 9 பேர் அரசியல் கட்சி சார்பாகவும் போட்டியிட்டனர். இதில், அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 19சுயட்சை வேட்பாளர்களில் “முதல்” இடத்திலும்.
அரசியல் கட்சி சார்பாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் மூன்று அரசியல் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி,
28 வேட்பாளர்கள் களம் கண்டதில் 6ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று 6வது இடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் வாக்களித்த அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.