தமிழன்டா கலைக்குழு இயக்கம் மற்றும் கலைக்கூடம் போன்றவற்றில் எதிர்கால திட்டம் என்பது பாரம்பரிய கலைகள் வளர வேண்டும் பாரம்பரிய உணவுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் பாரம்பரிய மருத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் இவை அனைத்தும் அடுத்த தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கொள்கையாகும் அந்த கொள்கையின்படி வாய்ப்புகள் எங்கெல்லாம் வழங்கப்படுகிறார்களோ அந்த பகுதிகளில் எல்லாம் நாம் நம்முடைய கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறோம் அந்த வகையில் இன்று தூத்துக்குடி அருகில் உள்ள சிலுவை பட்டி பகுதியில் முத்து சிலம்பக்கூடம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த கூடத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்று வெளியேறியிருக்கிறார்கள் இன்று அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலை பயிற்சியை வரை இசை பயிற்சியை கற்றுக் கொடுப்பதற்கான தொடக்க விழா நடந்தது இதில் தமிழன்டா கலைக்குழு இயக்குனர் ஜெகஜீவன் பொறுப்பாளர் ஐகோர்ட் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்