தீபாவளி போனஸ் வழங்க கோரி ஹெச் எம் எஸ் தொழிலாளர்கள் மனு

Spread the love

தீபாவளி போனஸ் வழங்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹச்எம்எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையினர் மனு அளித்தனர்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஹச்எம்எஸ் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.பின்னர் இது குறித்து ஹச்எம்எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹச்எம்எஸ்கட்டுமான அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்களின் கடிமான உழைப்பிற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நல வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் ரூ. 7000 வழங்கிட வேண்டும் எனவும் இவ்வாறு போனஸ் பெறுவதால் தொழிலாளர்களுக்குரிய சட்ட சமூக பாதுகாப்பு பெறுவதில் முன்னேற்றம் பெறுவதோடு உரிய காலத்தில் புதுப்பித்தல் செய்திட அக்கறை கொள்ளவும் புதிதாக நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதை தமிழ்நாடு அரசு மற்றும் வாரிய நிர்வாகத்தின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இதுகுறித்து கோரிக்கை அளித்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த அவர், நிரந்தர பணியாளர்களுக்கு அரசு சார்ந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. அதைப்போல் ஹச்எம்எஸ் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இந்த உதவி தொகை கொடுத்தால் தீபாவளி சமயத்தில் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை பெற்று அன்றாடம் குடும்பத்தை நடத்துவதில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதனால் விழா கால தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக தெரிவித்தார்.இதில், ஹச்எம்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், பொருளாளர் பெஸ்ஸி நிர்மல், இணைச் செயலாளர் மகளிர் அணி சந்திரமணி, மரியா திவ்யா, விஜி, சரோஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *