கோவில்பட்டி அருகே கண்டெய்னர் மீது கார் மோதிய விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் இன்று (அக். 14) பலியானார்.நாலாட்டின்புத்தூர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் மணிமாறனின் மகன் சதீஷ், தலையில் பலத்த காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இறுதிச்சடங்கில் பங்கேற்றுத் திரும்பியபோது சோகம்மதுரை தினபூமி நாளிதழில் முதன்மைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு இன்று (அக். 14) அதிகாலை தோவாளையில் உடல் நலக்குறைவால் காலமானார்.அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் தோவாளையில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு திரும்பியபோது, தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.தினபூமி உரிமையாளர் மணிமாறன், ஆதார் அட்டைதினபூமி உரிமையாளர் மணிமாறன், ஆதார் அட்டைகன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கிச் சென்றபோது, கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறிய கார், எதிரே வந்த கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பலியானார்.காரை ஓட்டிச்சென்ற மணிமாறனின் மகன் சதீஷ், படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டெய்னர் ஓட்டுநர் காயங்களின்றி தப்பினார்.இது குறித்து நாலாட்டின்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.