தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளயைூரணி ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதியில் உள்ள கன்மாய்கள் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வௌ்ளம் புகுந்தது.
சுமார் 40 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் பொிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் அதிகாாிகள் பாா்வையிட்டு வளா்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்த நிலையில், பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்கள் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் விளையாட்டு திடல் பகுதியில் புதிதாக 3 பொிய நீர் செல்லும் கால்வாய்கள் கட்டப்பட்டு வருவதையும் டி.சவோியார் புரத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தையும் பின்னர் ஆ.சண்முகபுரம் முதல் கோமஸ்புரம் வரை 4.85 லட்சம் மதிப்பில் 2.2 கிலோ மீட்டர் புதிதாக கட்டப்பட்டு வரும் பொிய கால்வாய் பணிகளையும் சண்முகையா எம்.எல்.ஏ பாா்வையிட்டு ஓப்பந்த தாரர்களிடம் நல்ல முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பின்னர் தருவைகுளம் சாலையில் உள்ள ஓடை பாலம் பகுதியில் செல்லும் நீர் வழிதடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.
கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு பொறியாளர் ரவி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும் கப்பிகுளம் பாபு கௌதம் உள்பட பலர் உடனிருந்தனர்.