தூத்துக்குடியில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா : தெட்சணமாற நாடார் சங்கம்SPJM நண்பர்கள் சார்பில் 10,000 பேருக்கு அறுசுவை விருந்து

Spread the love

தூத்துக்குடியில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா : தெட்சணமாற நாடார் சங்கம்
SPJM நண்பர்கள் சார்பில் 10,000 பேருக்கு அறுசுவை விருந்து பண்டாரவிளை வைத்தியர் SPJ முருகேசன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில்
கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அந்தோணியார் கோவில் அருகே பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலித்தது இன்று காலை
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு
தெட்சணமாற நாடார் சங்கம்
SPJM நண்பர்கள் சார்பில்
பண்டாரவிளை வைத்தியர் SPJ முருகேசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து காமராஜர் சிலை எதிரே அமைந்துள்ள
தெட்சணமாற நாடார் சங்கம் பேட்டை வளாகத்தில் மதியம் 12 மணிக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பண்டாரவிளை வைத்தியர் SPJ முருகேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில்
பொதுமக்கள் சுமார் 10,000 பேருக்கு மேல் ஆண்கள் பெண்கள், என அனைத்து தரப்பினரும் இந்த அசைவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
மட்டன் குழம்பு,
சிக்கன் 65, பாயாசம், சாம்பார், ரசம், பொரியல் என அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உணவு அருந்த வந்ததால் நீண்ட வரிசையில் இருந்த பொதுமக்களை தென்பாகம் காவல் நிலையம் போலீசார் வரிசையில் அனுப்பி வைத்து சாப்பிட வைத்தனர். தூத்துக்குடியில்
ஆண்டுதோறும்
காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு
தெட்சணமாற நாடார் சங்கம்
SPJM நண்பர்கள் சார்பில் அறுசுவை விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மிகப்பிரம்மாண்டமான முறையில் பண்டாரவிளை வைத்தியர் SPJ முருகேசன் ஏற்பாட்டில் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு சுமார் 10,000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில்,
பண்டாரவிளை வைத்திய ர்கள்spj சுந்தர்ராஜன், கணேஷ், செய்தியாளர் ராஜு, முத்து பாலகிருஷ்ணன், சண்முகராஜா, ஹரி, ரவி, நாட்டாமை அன்புராஜ், செந்தில், வழக்கறிஞர் குமாரவேல், மூத்த பத்திரிகையாளர் ஆத்திமுத்து மற்றும் SPJM நண்பர்கள் உட்பட ஏராளமானோர்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *