தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருவர் கைது

Spread the love

தூத்துக்குடியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி லாரியில் 65 பேரல்களில் கடத்திவரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் மீன்பிடி துறைமுகத்தில் பறிமுதல் இரண்டு பேர் கைது.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், நேற்று இரவு மீன் பிடித்துறை முகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழுமா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்ட போது தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி லாரியில் 65 பேரல்களில் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.இதன் மதிப்பு ரூபாய் 8 லட்சம் என்றும், சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்ததை தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்து மேலும் லாரியை போட்டி வந்த தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சார்ந்த கந்தன் மற்றும் கே வி கே நகர் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பயோடீசல் மற்றும் இரண்டு பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *