தமிழன்டா இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிறந்தநாள் கொண்டாட்டம்..

Spread the love

தூத்துக்குடியில் பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் தமிழன்டா இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினார்கள்…


தூத்துக்குடி தமிழன்டா இயக்கம் நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளை தமிழன்டா இயக்கம் சார்பில் தமிழ்நாடு பிறந்த நாளையொட்டி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் வளாகத்தில் பொதுமக்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினார்கள்.


தமிழன்டா இயக்க கௌரவ ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் தமிழன்டா கலைக்குழு கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தந்த மாநில பண்பாடுகள் அந்தந்த மாநிலத்தில் போற்றப்பட வேண்டும் செண்டை மேளம் கேரளாவில் மட்டுமே போற்றப்பட வேண்டும் தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் சிந்தனை நவம்பர் 1-ம் தேதி இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள். இந்த நாளில், 1956-ம் ஆண்டு மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

இந்த முடிவு, இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்தது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உண்டு. தங்களது மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுவாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் உருவாவதால், நிர்வாகம் எளிமையாகும். மக்களின் பிரச்சினைகளை அவர்களது சொந்த மொழியில் எடுத்துச் சொல்ல முடியும். பகுத்தறிவு இயக்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மொழிவாரி மாநிலங்கள் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியது.

தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும், பின்னர் மொழிவாரி மாநிலங்கள் அரசியல் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்தியது. தனி மாநிலங்கள் உருவானதால், அந்தந்த மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. சில சமயங்களில் மொழிவாரி அடிப்படையில் பகுதிவாதம் தோன்றும் அபாயமும் இருக்கிறது. தமிழ்நாடு, மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தின் பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றதால், தமிழர்களிடையே ஏமாற்றம் நிலவியது இன்றும் நிலவிக் கொண்டிருக்கிறது. இன்று இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால், இந்தியா பல மதங்கள் பல இனங்கள் பல மொழிகள் பல பண்பாடுகள் போன்றவை அடங்கி இருக்கிறது. இந்தியாவில் 28 மாநிலங்களும், டில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முறைப்படி நடைமுறைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமையன்று 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *