சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட குழியால் தொடர் விபத்து ……. உடனயாக மூட மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி MS.முத்து மாநகர செயலாளர் கண்டனம்……..தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை முத்து நகரின் மைய சாலையாக உள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலை மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மானவியர்கள் .. பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்இந்நிலையில் குழாய் பதிப்பதற்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு முழுையாக மூடாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பிரதான சாலையில் குழி தோண்டும் போது அதை மூட மாநகராட்சி நிர்வாகமும்… நெடுஞ்சாலை துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தின் இறக்கத்தில் இருக்கும் போது இந்த குழி கூடுதல் ஆபத்தானது என்பதை மாகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடன யாக தமிழ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கட்சி மாநகரக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…MS.முத்து மாநகர செயலாளர் தூத்துக்குடி…