முதலமைச்சா் ஸ்டாலின் வழியில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

Spread the love

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த நாடாளுமன்ற தோ்தல் நடைபெற்ற ஓராண்டுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க நாம் களப் பணியாற்றினோம்.

அதன் மூலம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். இன்னும் 14 மாதத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழக முதலமைச்சரின் இலக்கான 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தமிழகம் முழுவதும் எல்லோரும் பணியாற்றி வருகின்றனர். நமது மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மிகப்பொிய வெற்றியை பெற்று முதலமைச்சாிடம் அதை சமா்ப்பிக்க வேண்டும் தூத்துக்குடி தொகுதியில் திமுகவை தவிர மற்ற வேட்பாளா்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று இங்கு தோ்தல் பொறுப்பாளராக நியமணம் செய்யப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இன்பாரகு பேசினாா்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தொகுதி முழுவதும் திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை முழுமையாக எல்லா தரப்பினாிடமும் ெகாண்டு போய் சேர்க்க வேண்டும் நம்முடைய மாவட்டம் மொழிப்போர் தியாகிகள் வளர்ந்த இடம் என்பதையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் 2006 திமுக ஆட்சியின்போது பக்கிள்ஓடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுபோன்று பல்வேறு வளர்ச்சி பணிகளை நம்முடைய ஆட்சியில் தான் இந்த தொகுதிக்கு செய்துள்ளோம். தொழில் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.

அனைவரும் கவனமாக செயல்பட்டு மீண்டும் முதலமைச்சராக தளபதியாரை அறியனையில் அமர செய்ய சபதம் ஏற்று முதலமைச்சா் வழியில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி, தொகுதி பொறுப்பாளரும் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளருமான இன்பாரகு, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளா் அனந்தையா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், கவிதாதேவி, சீனிவாசன், ரமேஷ், அருணாதேவி, அருண்குமாா், நாகராஜன், சின்னத்துரை, ஜோசப், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், இராஜா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன். சுரேஷ்குமாா், ஜெயக்குமார், மேகநாதன். ராமகிருஷ்ணன். மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். சக்திவேல், செல்வகுமாா். ராஜ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் அருண்சுந்தா், முருகஇசக்கி, ஜெயக்கனி, செல்வின், சங்கரநாராயணன், டினோ, ரவி. வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி, முனியசாமி, சுப்பையா, டென்சிங், ஜான்சன், முத்தராஜா, பத்மாவதி, சுரேஷ், செல்வராஜ், மனோ, கருப்பசாமி, பொன்பெருமாள், பொன்ராஜ், கதிரேசன், சக்திவேல், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா. செந்தூர்பாண்டி, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமாா், சரண்யா, இசக்கிராஜா, கண்ணன், ராஜதுரை, பவாணி, சுப்புலட்சுமி. பேபி ஏஞ்சலின், ஜான்சிராணி, ரெக்ஸின், தெய்வேந்திரன், கந்தசாமி. விஜயகுமாா். பகுதி பொருளாளா் உலகநாதன். மற்றும் கருணா. மணி அல்பட். உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *