எம்.பி தோ்தலை விட எம்.எல்.ஏ தேர்தல் தான் நமக்கு முக்கியம் என்று அனைவரும் பணியாற்ற வேண்டும் இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

Spread the love

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணையிக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் ரத்தினம் மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் பொருளாளர் குமாரவேல் ஜெ பேரவை செயலாளர் சேது பாலசிங்கம் மருத்துவரணி செயலாளர் இளையராஜா மாவட்ட மீனவரணி செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலையில் மண்டபம் பேரூராட்சியில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில் எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் அட்டைகள் வழங்கப்பட்டு அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது. அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் அதன்பின் வழிநடத்திய ஜெயலலிதா வழியில் 3ம் தலைமுறையாக எடப்பாடியார் தலைமையேற்று கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி வருவது மட்டுமின்றி இரண்டே கால்கோடி உறுப்பினர்களை உருவாக்கியுள்ளார்.

தோ்தல் நேரத்தில் நாம் பணியாற்றுவதற்கு வசதியாக பூத்கமிட்டி முறையாக அமைக்க வேண்டும் ஏற்கனவே இளைஞர்கள் இளம் பெண்கள் கட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தான் இளைஞர் பாசறை உருவாக்கப்பட்டது. தலைமை கழககத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 10 சதவீதம் வாக்கு வங்கி நமக்கு குறைந்துள்ளது அதற்கு வலுசோ்க்கும் வகையில் இளைஞர்கள் இளம் பெண்களை கட்சியில் ேசர்ப்பதற்கு அனைவருமே பணியாற்ற வேண்டும் ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே எனது மறைவிற்கு பின்னால் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக கட்சி இருக்கும் அதை யாரும் அழிக்க முடியாது. என்று கூறினார். அதே வழியில் பல துரோகிகள் இருந்து பல சதி செயல்களில் ஈடுபட்ட போதிலும் கட்சியை கட்டுகோப்பாக வழிநடத்தி வருகிறார். எம்.பி தேர்தலில் நாம் படுதோல்வி அடைந்தோம் அது கொஞ்சம் வேதனையான விஷயம் தான் இருந்தாலும் எம்.பி தோ்தலை விட எம்.எல்.ஏ தேர்தல் தான் நமக்கு முக்கியம் என்பதை நினைவில் வைத்து கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி பலத்தின் மூலம் தான் திமுக பொிய கட்சியாக விளங்குகிறது.

ஆனால் அதிமுக தான் மிகப்பொிய கட்சி இதையெல்லாம் உணா்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும் கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து தான் எடப்பாடி உள்பட நானும் பல்ேவறு பதவிகளிலிருந்து இன்று எடப்பாடியார் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் இதே போல் உழைக்கின்ற அனைவருக்கும் அதிமுக ஆட்சி அமையும் போது உாிய அங்கீகாரம் வழங்கப்படும். என்று பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், மேலூர் கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியன் மற்றும் மனோகர் புங்குராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் நகர செயலாளர் அர்ச்சுனன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *