வேட்டையன் சர்ச்சை – அரசுப் பள்ளிக்கு அவப்பெயர் தரும் காட்சிகளை நீக்க கோரி போராட்டம்

Spread the love

கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்கிற வகையில் உள்ள காட்சியை நீக்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (PMT) மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் இசக்கிராஜா கோரிக்கை…… அரசு பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேட்டையன் திரைப்பட காட்சியை நீக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (PMT) மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் இசக்கிராஜா மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தினை ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்கிற வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரில் அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட அரசு பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் ஒழுக்கத்துடன் நன்கு படித்து வரும் சூழ்நிலையில் மேற்படி காந்திநகர் அரசுப்பள்ளியானது 2009-2010 கல்வி ஆண்டின் தமிழ்நாட்டிலேயே சிறந்த பள்ளி என்று விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இன்று வரை 10 வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வரும் பள்ளியாகும்.இச்சூழ்நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் வரும் காட்சியானது அந்த பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவ மாணவியருக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் மிகுந்த மன வேதனையை அளித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் சேர்க்கை சதவீதம் குறைந்து வரும் சூழலில் வேட்டையன் படத்தின் காட்சி அமைப்பு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை குறைக்கும் விதமாகவும் அங்கு பயிலும் மாணவர்களின் நற்பெயருக்கு களக்கம் விளைவிக்கும் விதமாகவும் உள்ளது வேதனை அளிக்கிறது.ஆகவே ஞானவேல் இயக்கி ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் மேற்குறிப்பிட்ட காட்சியை நீக்குவதோடு இந்த படத்தை இயக்கியுள்ள ஞானவேல் மீதும் சட்ட ரீதியிலான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *