அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையத்தின் 23வது கட்டுநர் தின விழா மற்றும் மெகா மருத்துவ முகாம் (இன்று நிலையானது நாளை நிலைத்திருக்கும் என்ற தலைப்பில்) தூத்துக்குடி புது கிராமம் ASKR திருமண மஹாலில் வைத்து சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அன்று காலை 10 மணி அளவில் துவங்கிய விழாவில் தூத்துக்குடி மையத்தின் தலைவர் ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளருமான ER. முஜாஹித் அலி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத் தலைவர் B. பழனிவேல் தலைமை உரையாற்றினார்.. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் மதிப்பிற்குரிய மேயர் P. ஜெகன் பெரியசாமி அவர்கள் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர்கள் D. ரமேஷ் மற்றும் P. R. அசோக் குமார் அவர்களும் ஐஸ்வர்யம் டிஎம்டி கம்பி நிர்வாகி மற்றும் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொருளாளர் P. பரமேஸ்வரன் அவர்களும் தூத்துக்குடி பில்டர் சொசைட்டி தலைவர் N. கருப்பசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மெகா மருத்துவ முகாம் அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையத்தின் பொருளாளர் பிளட் ஜெயபால் ஆலிவர் அவர்களின் ஏற்பாட்டில் ராஜேஷ் திலக் மருத்துவ மனையிலிருந்து Dr. ராஜேஷ் திலக், Dr. ஜாஸ்மின் ராஜேஷ், வாசன் கண் மருத்துவமனையின் முன்னணி மருத்துவ ர்கள் , மற்றும் அலாய் ஆர்த்தோ கிளினிக்கின் Dr. பிரபு அலாய் ,Dr. செல்வ சுடர் வினோஜினி அவர்கள் கலந்துகொண்டு இலவச ஆலோசனைகள், இலவச மருந்துகள், இலவச பரிசோதனைகள், பிசியோதெரபி, தைராய்டு பரிசோதனை,மற்றும் கண் கண்ணாடிகள் இலவசமாக கொடுக்கப்பட்டன. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 100கும் மேற்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார தொழிலாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையத்தின் 23 வது கட்டுணர் தின விழா மைய உறுப்பினர்களின் குடும்ப விழாவாக மாலை 6:00 மணிக்கு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், பரிசுகள் வழங்கப்பட்டு மையத்தின் செயலாளர் E. மகாராஜன் அவர்கள் நன்றி உரையாற்றி விழா சிறப்பாக முடிவடைந்தது. இவ்விழாவில் அகில இந்திய கட்டுநர் சங்கம் தூத்துக்குடி மையத்தின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள்,,கோவில்பட்டி மைய தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.