.நாம் இந்தியர் கட்சித் தலைவர் என். பி. ராஜா இல்ல திருமண விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான என் பெரியசாமி – எபநேசர் அம்மாள் ஆகியோரின் மகன் வழி பேத்தியும் தூத்துக்குடி பால்ராஜ் ஹெப்சி பாய் ஆகியோரின் மகள் வழி பேத்தியும் நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி ராஜா – சுபா ஆகியோரின் மகளுமான பெரிசாவுக்கும், தூத்துக்குடி பாஸ்கரன் ஜெயந்தி ஆகியோரின் மகன் விக்ரம் -க்கும் தூத்துக்குடியில் ஏவிஎம் மஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வேலவன் ஹைபர் மார்க்கெட் நிறுவன தங்கவேல் நாடார், பெல்வின், குணசின், மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், ஜோசப் செங்குட்டுவன்,, ஜவகர், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், பூங்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் வாரியார், செயலாளர் செல்வின், பொருளாளர் கணேஷ் பாரதி ,வழக்கறிஞர்கள் சொர்ணலதா, ரூபன் கிஷோர், மயில்ராஜ், பெருமாள், செல்வராஜ், பால் ஆசீர், ரமேஷ் பாண்டியன், முத்துலட்சுமி, சாமி டயர்ஸ் திராவிட மணி, ஏவிஎம் டாக்டர். கணேஷ் மாரிமுத்து, சென்னை சுங்கத்துறை முன்னாள் அதிகாரி அழகேசன், மறவன் மடம் ரமேஷ், எஸ் கணேஷ் பெருமாள், நாம் இந்தியர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழா ஏற்பாடுகளை நாம் இந்தியர் கட்சி செயலாளர் பொன்ராஜ் பொருளாளர் ஜெயகணேஷ், தலைமையில் நாராயணன், செல்வராஜ், சுரேஷ், செல்வகுமார், இளங்கோ, ராஜ்குமார், உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவிற்கு வந்தவர்களை மணமகளின் பெற்றோர் என் பி ராஜா – சுபா மணமகனின் பெற்றோர் பாஸ்கரன் ஜெயந்தி மற்றும் இருவீட்டாரும் வரவேற்றனர். நாம் இந்தியர் கட்சித் தலைவர் என்பி ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.







Leave a Reply