தூத்துக்குடியில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை 4042 பேருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள் கலெக்டர், எம்எல்ஏக்கள், மேயர், பங்கேற்பு
தூத்துக்குடி.
தமிழக அரசின் சார்பில் 2ம் கண்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகள் 4042 பேருக்கும், தொழில்கடன் பயனாளிகளுக்கும், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
தாட்கோ மூலம் தொழில்கடன் 2 பேருக்கு 1லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும், மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்கடன் 2 பேருக்கும், மருத்துவ காப்பீடு அட்டை 2 பேருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, துணை கலெக்டர் மகேந்திரன், பயிற்சி கலெக்டர் புவனேஸ்ராம், எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கேண்டயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார்கள் திருமணி ஸ்டாலின், இசக்கி முருகேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட தாட்கோ மேலாளர் ஜெனிசிஸ்; ஷிபா, வருவாய் அலுவலர் குமரன், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜலெட்சுமி, விஜயமூர்த்தி, திரேஸ்அம்மாள், துணை மேயர் ஜெனிட்டா, மாநில சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், மண்டல தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் பவாணி, விஜயகுமார், ரெக்ஸின், மரியகீதா, மகேஸ்வரி, ஜெயசீலி, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், ஜேசுவடியான், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன்இசக்கி, மாவட்ட துணைச்செயலாளர் ஜெபதங்கம் பிரேமா, மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார் பழனி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணா தேவி, பகுதிசெயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், டென்சிங், சுரேஷ்மகாராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, பிரபாகர், அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் வள்ளி நன்றியுரையாற்றினார்.








Leave a Reply