ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

ஊர் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு 3 ஆண்டுகள் நூதன தண்டனை!

மதுபோதையில் கோவில் திருவிழாவில் தகராறு செய்தவர்களை கண்டித்த ஊர் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறாருக்கு17 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஆண்டுகள் நூதன தண்டனை..தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிகுழும்ம் அதிரடி உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயத 45). இவர் கல்லூரணி ஊர்த்தலைவராக இருந்தார். கடந்த 12.08.2008 அன்று கல்லூரணி ஊரில் உள்ள காளியம்மன் கோவில் கொடைவிழாவின் போது, ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன் என்ற குச்சிமுருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனை சுப்பையா கண்டித்து உள்ளார். தொடர்ந்து ஊர் கூட்டத்திலும் 3 பேரையும் சுப்பையா கண்டித்து உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும், கடந்த 14.08.2008 அன்று சுப்பையா, அவரது மகன் ராஜாவுடன் குளத்தூர்-கல்லூரணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பையா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் முருகன், முனியசாமி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சமுதாயப்பணி

அதே நேரத்தில் 17 வயது சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் எஸ்.பாக்கியராஜ், உறுப்பினர்கள் சரவணன், உமாதேவி ஆகியோர், குற்றம் சாட்டப்பட்ட இளஞ்சிறாருக்கு நூதன தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி ஊர்தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறார் 3 ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் தினமும் காலை 8 மணி முதல் 4 மணி வரை சமுதாய பணியாற்ற வேண்டும். இவரது வருகையை உறைவிட மருத்துவ அலுவலர் கண்காணித்து மாதம் தோறும் இளம்சிறார் நீதிக்குழுமத்தில் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், மேலும் ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் உதவு குற்றவியல் வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜர் ஆனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *