ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையினால் தொழுநோய் மருத்துவமனையில் அதிகப்படியான மழைநீர் தங்கி வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்தது.
நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில்
சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா இரவு பகல் பாராமல் மருத்துவமனையிலேயே இருந்து மழை நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள்,ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து மழை நீரை வெளியேற்ற மிகப் பெரும் பங்காற்றினார்.
இத்தகைய செயலுக்காக தொழுநோய் மருத்துவமனை தலைமை பொறுப்பாளர் அருட்சகோதரி.ராஜீ சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC.ராஜேந்திரன் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ்பாலன்
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் ஒன்றிய சுற்றுச்சூழணி அமைப்பாளர் ராஜேந்திரன் கிளை செயலாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…
புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டார்..








Leave a Reply