ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

கூத்தங்குளி மீனவர் படகு மீது பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் நிவாரண உதவி கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் பெரியராஜா (18) மீனவரான இவர், கடந்த 27.11.25ம் அன்று தாமஸ்சுரேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குளி அருகே மீனவர்கள் படகு மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பெரியராஜா காயம் அடைந்தார். இந்த நிலையில், படகு உரிமையாளர் தனக்கு உரிய நிவாரண உதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *