உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தூத்துக்குடி டிசம்பர் 14:உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்;
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அரசு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ சமூகமும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் பயனாளர்களுக்கு வழங்கினார். இந்த உதவிகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், சமூகத்தில் சம உரிமையுடன் முன்னேறுவதற்கும் பெரிதும் துணைபுரியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங்,
மேலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கத்தின் மாநில தலைவர் மருத பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன் மற்றும் சங்கத்தின் கிளை அமைப்பு தலைவர்கள் அற்புதராஜ், எப்போதும் வென்றான் மொட்டையசாமி, மேலக்கரந்தை அய்யனார், மேல கூட்டுடன்காடு ராமகிருஷ்ணன், செக்காரக்குடி ஆறுமுகம், புதுக்கோட்டை பொன்ராஜ், மேலத் தட்டப்பாறை சின்னத்துரை, குமரட்டியாபுரம் பிச்சாண்டி, புதியம்புத்தூர் தமிழ்செல்வி, வேம்பார் பெரியசாமி, கோவில்பட்டி முத்து மாடசாமி, ஏரல் சுல்தான், குலசேகரப்பட்டினம் கமல் ஜவகர், கிருஷ்ணராஜபுரம் அந்தோணி ராஜ், தாளமுத்து நகர் ராமகிருஷ்ணன் அதேபோல் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் கமல் தனசேகர், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சகா கலை குழுவைச் சேர்ந்த முனைவர் சகா. சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






Leave a Reply