தூத்துக்குடி.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்தநாள் விழா மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, கழக வளர்ச்சிப் பணி குறித்து வடக்கு மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் வரும் 16ம் தேதி செவ்வாய் கிழமை காலை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் எனது தலைமையில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி முன்னிலையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.








Leave a Reply