தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடு இரவிலும் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்தார். உள்ளாட்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு. கனிமொழி எம்.பி ஆகியோரின் ஆலோசனையின் படி தூத்துக்குடி மாநகராட்சி எந்த அளவுக்கு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு தகுந்தாற்போல் பல கட்ட பணிகளை தொடர்ந்து செய்து தனது தந்தையின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார் மேயா் ஜெகன் பொியசாமி.
தூத்துக்குடி மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து வரும்நிலையில் மாநகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் 28 வருடங்களுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது அதன் பின்பு எந்த ஒரு மாநகராட்சி மேயரும் அதனை சீரமைப்பு பணியை செய்ய முன்வரவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி தெப்பக்குளத்தை நேரில் பார்வையிட்டு பல கட்டங்களாக ஆலோசனை செய்து நவீன மயமாக்கும் பணியை கடந்த மாதம் மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார்.
75 லட்ச ரூபாய் மதிப்பீல் சீரமைப்பு பணிகள் பொதுமக்களின் பொழுது போக்கு அம்சத்துடன் அமைப்பதற்காக நடைபெறும் பணிகளையும் தொடர்ந்து பார்வையிட்டு வந்தார்
இந்நிலையில் புதன்கிழமை இரவு தெப்பக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நடைமேடை இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது இரவோடு இரவாக நேரில் பார்வையிட்டார். அதன் பின்பு வியாழக்கிழமை காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தி சீரமைப்பு பணிகளை எப்படி சரி செய்வது என்று ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அண்ணா யுனிவர்சிட்டி நிபுணர்களை வரவழைத்து அதன் அடிப்படையில் பணிகளை ஏற்பட்ட விரிசலை சரி செய்வது என்று முடிவு செய்தார்
வியாழக்கிழமை இரவு அதிகாரிகளுடன் தெப்பக்குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் சில கருத்துக்களை கேட்டறிந்தார் நடு இரவு வரை அங்கு பணிகளில் இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை செய்தார். இதுபோல நிகழ்வு இனிமேல் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில் அதற்கான தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு வரை அங்கேயே இருந்து பணிகளை கண்காணித்து வந்தனர் மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்ற நாள் முதல் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காகவே பணி செய்து வருகிறார் 6 மணி நேரம் மட்டும் ஓய்வெடுத்து வருகிறார் மேலும் திமுக தலைமை தன் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மாநகராட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், போல்ேபட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனா்.








Leave a Reply