தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் ஆன பானு பிருந்தாவன் ஓட்டல் நிறுவனம் தங்களது இடத்தில் வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்பும் காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தங்களது இடத்தில் தங்களது அனுமதி இல்லாமல் மின்வாரிய அதிகாரிகள் துணையுடன் மின் கம்பத்தை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடத்தின் உரிமையாளர்கள் குழிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நேரு தோட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஏக்கர் இடம் அமைந்துள்ளது இந்த இடத்தில் முன்பு முத்துசாமியின் மனைவி பானுமதி பெயரில் தியேட்டர் இருந்தது முத்துசாமி இறந்துவிட அவரது வாரிசுதாரர்களான வழக்கறிஞர் காந்திமதி நாதன் சங்கர் மற்றும் சிதம்பர செண்பக தேவிகா ஆகியோர் இந்த இடத்தை தற்போது அனுபவித்து வருகின்றனர்
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள பானு பிருந்தாவன் என்றபிரபல தனியார் ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான மணி என்பவர் இந்த இடத்தில் புதிதாக தனது நியூ பானு பிருந்தாவன் என்ற பெயரில் ஹோட்டல் மற்றும் திருமண மண்டபத்தை வாடகை ஒப்பந்த அடிப்படையில் நிறுவியுள்ளார்
இதை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு பானு பிருந்தாவன் ஹோட்டல் உரிமையாளர் மணி இறந்துவிட அவரது மகன் தமிழ்ச்செல்வன் தற்போது இந்த ஓட்டல் நிர்வாகத்தை கவனித்து வருகிறார் மணி இறந்தவுடன் வாடகை ஒப்பந்தமும் காலாவதி ஆகி உள்ளது தமிழ்ச்செல்வன் முறையாக வாடகையை வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது
எனவே இந்த இடத்தை காலி செய்து தரும்படி இடத்தின் உரிமையாளர்கள் தமிழ்செல்வனிடம் கூறியுள்ளனர் அவர் இடத்தை காலி செய்ய மறுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலவையில் உள்ளது
இந்நிலையில் இடத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் தமிழ்ச்செல்வன் மின்சார வாரிய அதிகாரிகள் துணையுடன் இடத்தின் உரிமையாளர் நேரு தோட்ட வளாகப் பகுதியில் மின்கம்பம் அமைப்பதற்காக பணத்தை மின்சார வாரியத்தில் கட்டியது போன்று ஆவணங்களை உருவாக்கி உள்ளனர் இதற்கு இடத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மின்கம்பம் நடுவதற்கு தடையானை வாங்கியுள்ளனர்
இந்நிலையில் இன்று மின்வாரிய அதிகாரிகள் நேரு தோட்ட வளாக பகுதியில் உள்ளே புதிதாக மின்கம்பங்கள் நடுவதற்காக மின்சார வாரிய ஊழியர்களுடன் வந்துள்ளனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இட உரிமையாளர்களின் வாரிசு தாரர்களான பானுமதி மற்றும் அவரது சித்தி கோமதி ஆகியோர் மின்கம்பம் அமைக்கும் பகுதயில் குழிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பானு பிருந்தாவன் ஹோட்டல் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மீது காவல் நிலையம் மற்றும் மின்சார வாரியம் ஆகியவற்றில் புகார் அளித்தும் இதுவரை எவ்விர நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து அவ்வப்போது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை நடுகிறோம் என்ற பெயரில் வந்து தங்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் ஹோட்டல் ஊழியர்கள் தங்களை செல்போனில் படம்பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்
மேலும் இது தொடர்பாக காவல்துறையில் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் தங்களது பல கோடி ரூபாய் இடத்தை இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருவது கண்டிக்கத்தக்கது எனவே இதற்கு மாவட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஹோட்டலை காலி செய்து தங்கள் இடத்தை மீட்டு தர வேண்டுமென என கோரிக்கை விடுத்தனர்
தூத்துக்குடியில் பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனம் வாடகை ஒப்பந்தத்தை மீறி மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை துணையுடன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது