ஸ்ரீசித்தர்பீடத்தில் மஹாதேவ காலபைரவாஷ்டமி வழிபாடு

64வகை அபிஷேகத்துடன் சித்தர் தலைமையில் கோலாகலம்
64வகை அபிஷேகத்துடன் சித்தர் தலைமையில் கோலாகலம்
தூத்துக்குடி.
ஸ்ரீசித்தர்பீடத்தில் மஹாதேவ காலபைரவாஷ்டமி வழிபாடு
பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகிட வேண்டி ஸ்ரீசித்தர்பீடத்தில் மஹாதேவ காலபைரவாஷ்டமி வழிபாடு 64வகையான அபிஷேகத்துடன் சித்தர் தலைமையில் கோலாகலமாக நடந்தது.
பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகிட வேண்டி
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் காலபைரவரின் பிறந்த தினமான ”மஹாதேவ காலபைரவாஷ்டமி”யை முன்னிட்டு இன்று சிறப்பு யாக வழிபாடுகள் சுவாமி ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
உலகில் அன்பு, அமைதி நிலவிடவும், இயற்கை பேரிடர்கள் இல்லாத நிலைவேண்டியும், உலகம் எங்கும் விவசாயம், தொழில்வளம் சிறந்திடவும்,
பக்தர்கள் வாழ்வில் செல்வவளம் பெருகி கொழித்திடவும், வம்பு, வழக்குகள் இல்லாத நிலை வேண்டியும், நோய்கள், கடன் தொல்லைகள் இல்லாமல் போகவும், அனைவரும் வளமாக நலமாக வாழவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு 64வகையான அபிஷேகத்துடன் மஹா யாக சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
காலை 9.50மணிக்கு விநாயகர் வழிபாடுடன் வழிபாடுகள் தொடங்கியது. 10.25மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், 10.55மணிக்கு கன்னிகா பூஜையும், 11.10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி,-மஹா காலபைரவர் ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.
தொடர்ந்து, மதியம் 12.00மணிக்குமேல் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு மஞ்சள், விபூதி, குங்குமம், சந்தனம், இளநீர், பால், பன்னீர், தேன், தயிர், புனுகு, பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், மஹா யாகமும் கோலாகலமாக நடந்தது.
அதனைத்தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பல வகையான மலர்களால் மஹா காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு நடந்தது.
முடிவில், பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.







Leave a Reply