#காரியாபட்டி நாதஸ்வர கலைஞர் Dr. K.ரவிச்சந்திரன் அவர்களுக்கு அமெரிக்காவில் அமெரிக்கா மினி சோட்டா தமிழ் சங்கம் சார்பில் நாதஸ்வர ஆசான் விருது வழங்கி கவுரவிப்பு அமெரிக்கா மினி சோட்டா தமிழ் சங்கம் தமிழர் பாரம்பரிய கலைகளை அடையாளப்படுத்தும் வகையிலும், போற்றி பாதுகாக்கும் வகையிலும் அமெரிக்காவில் வாழும் தமிழ் உறவுகளுக்கு கலை பயிற்சி அளிக்கும் வகையில் ஆர்வத்தோடு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து கலைஞர்களை வரவழைத்து மரபுக் கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் இந்த ஆண்டும் இந்த கலை பயிற்சிக்கு கலைஞர்களை வரவழைத்து கலை பயிற்சிகளை அளித்து கலையை கற்றுக் கொண்டவர்களை மேடை ஏற்றி நமது பாரம்பரிய கலைகளை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் ஜூலை 19ஆம் தேதி முத்தமிழ் விழா என்று மிகப் பெரிய, பிரம்மாண்டமான நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தி தமிழர் கலைகளை சிறப்புமிக்க கலைகளாக பல்வேறு பரிமாணங்களில் நிகழ்த்தி உலகப் புகழ் பெற செய்து கொண்டிருக்கிறார்கள். மங்கல இசை, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கை சிலம்பு ஆட்டம், குறும்பர் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடாட்டம், மயிலாட்டம், மக்கள் இசை பாடல்கள் என்று பல்வேறு தமிழ் மண்ணின் பாரம்பரிய மரபுக் கலைகளை தொகுத்து வழங்கி விழாவினை சிறப்பான முறையில் நடத்தினார்கள். தமிழுக்காகவும், தமிழர் கலைகளுக்காகவும் சிறப்பானதொரு அரிய சேவைகளை மினி சோட்டா தமிழ் சங்கம் செய்து வருவது மிகப்பெரிய சாதனையாகும். முதற்கண் மினி சோட்டா தமிழ் சங்க உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகளை தமிழன்டா இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது. முத்தமிழ் விழாவில் தமிழக அரசு விருது பெற்ற கலைவளர்மணி சேவா ரத்னா டாக்டர் K. ரவிச்சந்திரன் நாதஸ்வரக் கலைஞர், நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை காரியாபட்டி விருதுநகர் மாவட்டம், பத்மஸ்ரீ வேலு ஆசான் ஸ்ரீவைகுண்டம் மகுடக்கலைஞர் சங்கர் கணேஷ் தஞ்சாவூர் தவில் கலைஞர் ஆகிய நான்கு கலைஞர்கள் பங்கேற்றார்கள் தமிழ் மண்ணின் கலைகளை மேம்படுத்தும் இவர்களை பாராட்ட வேண்டும் வாழ்நாளில் இந்த நிகழ்வுகள் மறக்க முடியாத கலை வடிவங்களாக தமிழருடைய மனதினை வருடி கொண்டே இருக்கும். கடல் கடந்து எத்தனையோ மைல்களுக்கு நமது மரபுக் கலைகளை மண்ணின் மனம் மாறாமல் கிராமியக் கலைகளுக்கு உயிர் கொடுக்கும் மினிசோட்டா தமிழ்ச் சங்க உறவுகளுக்கு தமிழன்டா இயக்கம் தமிழன்டா கலைக்குழு கலைக் கூடம் உள்ளவரை நன்றி கடன் பட்டிருக்கிறோம். தமிழ் சங்கம் நடத்திக் கொண்டிருக்கும் கலை பயிற்சி பட்டறையில் காரியாபட்டி கே ரவிச்சந்திரன் அவர்களை நாதஸ்வரப் பயிற்சியாளராக இரண்டு மாத காலங்களுக்கு அழைத்தும், முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு நாதஸ்வர இசையினை வழங்க வாய்ப்பு அளித்தமைக்கும் தமிழன்டா இயக்கம் தமிழன்டா கலைக்குழு நெஞ்சார பாராட்டுகிறது முத்தமிழ் விழாவில் “நாதஸ்வர ஆசான் விருது” ( நாயனம் ஆசான் விருது ) வழங்கி காரியாபட்டி கே ரவிச்சந்திரன் அவர்களை கௌரவ படுத்திய மினி சோட்டா தமிழ் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் கலியமூர்த்தி அவர்களுக்கும், சிவா மாரியப்பன் அவர்களுக்கும், சச்சிதானந்தம் அவர்களுக்கும், பாலா அவர்களுக்கும், அனைத்து பொறுப்பாளர்களுக்கும், அங்கத்தினர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. . தொடர்பு எண் :+919360595901


Leave a Reply