ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

ஓட்டப்பிடாரத்தில் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி டிவி பெட்டி வழங்கினார் தளவை ஏ கே எஸ் கண்ணன்

தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் கிராம பஞ்சாயத்து கச்சேரி தளவாய்புரம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக அதன் தொகுதி பொறுப்பாளர் தளவை ஏ கே எஸ் கண்ணன் தொலைக்காட்சி பெட்டி வழங்கினார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவர் மாரி விஜய் மற்றும் செவிலியர்கள் பணியாளர்களுடன் கழக உடன்பிறப்புகள் ஆர் முருகன் எம் கார்த்திக் ஜேசு மற்றும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *