தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி :

தூத்துக்குடி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக “ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  தலைமையில் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து இன்று  தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ஒன்றிணைவோம்! சமத்துவம் காண்போம்! எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் காவல்துறை கூடுதல் கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ மாணவிகளிடம் அனைவரும் பாகுபாடின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மற்றும் போதைப்பொருளினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் இளைஞர்கள் போதைப் பொருளை தவிர்த்து எதிர்காலத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜமால் உட்பட காவல்துறையினர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு. முத்துராசு தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. முருகன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு, கல்லூரி முதல்வர் திரு. டாக்டர். பி. முத்துராசு மற்றும் உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *