தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி டிச:31
தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணை தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன் ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில் கௌரவ ஆலோசகர் அருண் உறுப்பினர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும். தொடர்ந்து உறுப்பினர்களின் நலன் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, கண்ணன், முத்துராமன், ராஜன், உறுப்பினர்கள் ரவி, அருள்ராஜ், கற்பகநாதன், பாலகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் ஆகியோரிடம் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள். மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதிசெயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், பெருமாள்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *