தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம்சேகரம் ஜெபஞானபுரம் தூய இம்மானுவேல் ஆலய அசன விழா DSF அணித்தலைவர் கிப்சன் பங்கேற்பு


C.S.I தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம்சேகரம் ஜெபஞானபுரம் சபை தூய இம்மானுவேல் ஆலய அசன நேற்று 27/12/2025 அன்று நடைபெற்றது.இந்த அசன விழாவில் DSF அணி தலைவர் கிப்சன், தங்கம்மாள்புரம் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், மற்றும் பெருமன்ற உறுப்பினர்கள் ரட்சகர், ஜெயக்குமார், ரூபன், மோசஸ், குருவானவர்கள் எமில், ராபின் ஆகியோர் உற்சாகமாக பங்கேற்று அசன விருந்தில் உணவருந்தினர்.
முன்னதாக, ஜெபஞானபுரம் சபை சேகர உறுப்பினர் சம்பத் ஆசிரியர் மற்றும் சேகர உறுப்பினர்கள் டேனியல்,பிரவின் மற்றும் பிரவின் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. நிகழ்வில்
திருமண்டல முன்னாள் லே செயலர் கிப்சன் அவர்கள் ஜெபஞானபுரம் ஆலய அசனத்தை தேவ நாம மகிமைக்காக நடத்தி தூய இம்மானுவேல் ஆலயம்,ஜெபஞானபுரம் அசன கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் இந்த பணிக்காக கொடுத்து உழைத்த சபையின் பிள்ளைகள் அனைவரையும் மனதார பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *