அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 38வது ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் இன்று அனுசரிக்கப்பட்டது : எம்ஜிஆர் உருவ படத்திற்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி செலுத்தினார். 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 38வது ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் இன்று அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி டூவிபுரம் 5 வது தெரு அண்ணா நகர் சந்திப்பில் அலங்கரித்து வைக்க பட்டுள்ள எம்ஜிஆர் உருவ படத்திற்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் முழு திருவுருவ சிலைக்கும் தருவை மைதானம் முன்பு உள்ள புரட்சி தலைவரின் முழு திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *