தூத்துக்குடி
தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் அறிவிப்பு வரவேற்று புதுக்கோட்டையில் தெற்கு ஒன்றியச் செயலாளர் விண்ணரசி S.M.குழந்தை ராஜா தலைமையில் தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்.
தமிழக வெற்றி கழகத்தில் பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு இன்று தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர் இதில் மாவட்ட கழகச் செயலாளராக எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் இணைச்செயலாளராக கோல்டன் பொருளாளர் சிவக்குமார் துணைச் செயலாளர்கள் விஜு, மரிய கிரேசியா பெர்லின்சியாவும், தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி மாவட்ட கழகச் செயலாளராக மதன் ராஜா இணைச் செயலாளராக சுதாகர் பொருளாளர் அருண்குமார் துணைச் செயலாளர்கள் வசந்தி ஆதிசங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இதனை வரவேற்று, புதுக்கோட்டையில் தெற்கு ஒன்றியச் செயலாளர் விண்ணரசி S.M.குழந்தை ராஜா தலைமையில் தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை அரியணையில் ஏற்றுவோம் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிரமாக களப்பணி ஆற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதில், இணை செயலாளர் விஜய் ஆனந்த், துணை செயலாளர்கள்
மணிகண்டன், ஜெனி
பொருளாளர் வீரபெருமாள்,
மத்திய ஒன்றியச் செயலாளர்
ஜெபஸ்துராஜ்,
இணை செயலாளர் மாரிச்செல்வம்
மேற்கு ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி, மற்றும் நிர்வாகிகள்
முத்துக்குமரன், ரத்தினக்குமார்
ரமேஷ், மாரி, திருத்துவராஜ்,
ஜெபா, ராபின், அந்தோணி எஸ்தாக், விக்னேஷ், ஆழ்வார்,
சித்ரா உட்பட கலந்து கொண்டனர்.


