ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு

தூத்துக்குடி டிசம்பர் 14 : முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு செய்யப்பட்டது

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் மதுரை கடற்துறைவன், தூத்துக்குடி முத்துக்குளித்துறை மாமன்னர் தேர்மாறன், 16ம் பாண்டியபதியின் நினைவு தபால்தலை வெளியீட இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மதுரை காமராஜ் பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் முன்மொழிவு செய்யப்பட்டது.
பாண்டியாபதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில் ஜான், பெல்லார்மின், ஆனந்தி, டேட்வின் ஆகியோர் முன்மொழிவு செய்தனர். கடல்சார் மக்கள் சங்கமம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரவீன்குமார், தமிழ்நாடு மீனவர் சங்கம் மாநிலச்செயலாளர் அமலரசு சார்பில் ஆளுநருக்கு பாண்டியபதி பிறந்த நாள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *