தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாக
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பகுவன்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய அலுவலகம் ஜார்ஜ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் தலைமையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகுவன்தாஸ் ராவ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் எல். பி .ராயன் கோப்பைக்காக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் புதிதாக உருவாகி வரும் மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகளை பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகுவன்தாஸ் ராவ் பேசுகையில்….
தற்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களும் கிரிக்கெட்டில் முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏழு பேர் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார்கள்.
வரும் காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இந்திய அணிக்காக விளையாடுவார்கள் ஏனென்றால் வீரர்களுக்கு அத்தகைய ஊக்கத்தை அளித்து வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் தலைவர் மற்றும் அதன் நிர்வாகிகள் அனைவரின் செயல்பாடுகளும் வியந்து பார்க்கத்தக்க விதத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி தலைவர்கள் டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ்,உதவி ஜோன்ஸ், சீலன்,தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ், இணை செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள்
ரீகன், அஸ்வின் மற்றும் ரென்விக்
உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





Leave a Reply