ONETAMILNEWS

THOOTHUKUDI ONLINE NEWS

பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை


தூத்துக்குடி.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத் தேவர் மற்றும் மருது சகோதரர்களுக்கு போரின் போது தேவையான ஆயுதங்களை தனது கப்பல் மூலம் சென்றடைய உதவிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் முத்துகுளித்துறையின் 16வது மாமன்னரும், தூத்துக்குடி பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவருமான பாண்டியபதி தேர்மாறனின் 273ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி நினைவிடத்தில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில்: பாண்டியபதி ஜெயந்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த சமுதாய மக்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி நகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் கட்ட சட்டமன்றத்தில் அறிவித்து பெருமை சேர்த்தது கடந்த கால அதிமுக அரசு, அதேபோல் 2026ல் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் சமூதாய மக்களின் கோரிக்கையை ஏற்று பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் கட்டப்படும்.
மேலும், ஆட்சி மாற்றத்துக்கு பின் விளம்பர மாடல் திமுக அரசு வந்தவுடன் அந்த மணிமண்டபத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்காமல் சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் அமைத்துள்ளது இதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் புதிதாக தூத்துக்குடி நகர தந்தை ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி செயலாளருர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபாண்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சத்யா லட்சுமணன் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரு மணி, வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், ராஜ்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, மெஜூலா, சாந்தி, இராஜேஷ்வரி, தமிழரசி, அன்னபாக்கியம், ஷாலினி, ஸ்மைலா, முத்து லெட்சுமி, சரோஜா, நிர்வாகிகள் பரிபூரணராஜா, சொக்கலிங்கம், இம்ரான், ஸ்ரீராம், ராஜசேகர், வட்ட செயலாளர்கள் சங்கர், கொம்பையா, ஜெயகுமார், சேவியர்ராஜ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் மற்றும் விழா ஏற்பாட்டாளர்; இன்னாசி உள்பட பலர் கலந்து கொண்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *