2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். கூண்டுகிளி விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும். தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேட்டி.
தூத்துக்குடி.தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்ன் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்நிலையில் திமுக பிரமுகர் பி.டி.செல்வக்குமார் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எல்லாத் திட்டங்களும் முறையாக அறிவித்து அதை முறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அனைவரையும் அரவணைத்துச் சென்று ஆட்சி செய்வதின் மூலம் பொதுமக்களும் நன்மை அடைந்துள்ளனர். 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில்…


