மாப்பிள்ளை lஊரணி ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்:  ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ பங்கேற்பு

Spread the love

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளரும் எம்எல்ஏ-வுமான சண்முகையா தலைமை வகித்து இரு பயனாளிக்கு பட்டா மற்றும் நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கினார்;.

இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.



நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகரன், ராஜலெட்சுமி, உதவி தாசில்தார் ரமேஷ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, மணிவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலெட்சுமி, பாலமுருகன், சேர்மலதா, மீனாட்சி பாத்திமாராணி, வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துகிருஷ்ணன், உதவி பொறியாளர் நடராஜன், இளநிலை உதவியாளர் அற்புதராஜா, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், கூட்டுறவு சார்பதிவாளர் செயலாட்சியர் கிருஷ்ணன், இளநிலை உதவியாளர் மாரிமுத்து, கள அலுவலர் காசுகனி, பொதுசேவை மைய அலுவலர் ராஜலட்சுமி, இளநிலை உதவியாளர்கள் பிரபாகர், மூக்கையா, தீபா, ராஜா, வினோத், குமாரலிங்கம், கார்த்திக், சின்னத்தாய், சுந்தர், தங்கராஜ், டாக்டர் தினேஷ், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், பிரதீப்குமார், முகமது ஆசீக், ராஜலெட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கம் மாரிமுத்து, வசந்தகுமாரி, ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, சிவக்குமார், தர்மலிங்கம், ஒன்றிய வழக்கறிஞரணி அமைப்பாளர் சோனா ராஜன், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, மகாராஜன், வேல்ராஜ், நெல்சன், முருகன், போஸ் மற்றும் கப்பிக்குளம் பாபு உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *