தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 31வது வார்டுக்குட்பட்ட 305ம் பாகத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தேர்தல் முன்னெடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டச்செயலாளர் பாலகுருசாமி தலைமை வகித்தார். பிஎல்ஏ 2 முருகன் முன்னிலை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நேரில் சென்று திமுக அரசு செய்த சாதனைகளைச் சொல்லி மீண்டும் திமுகவிற்கு வாக்களிக்க செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக எந்த வளர்ச்சி திட்டப்பணிகளையும் மேற்கொள்ளாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இதனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கடும் நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதே பெரும் சவாலாக இருந்தது. கடும் நிதி நெருக்கடியின் மத்தியிலும் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். பெண்கள், மாணவர்கள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக விளங்கி வருகிறது. கடும் நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை போன்றவற்றையும் தாண்டி தமிழகத்தை கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சிப்பாதைக்கு திமுக அழைத்துச் சென்றுள்ளதை பொதுமக்களுக்கு விளக்கி தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதாற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று ேபசினாா்.
நிகழ்ச்சியில் கவுன்சிலா் கனகராஜ், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், பாகமுகவர்கள் ராமர், ராஜ்குமார், முருகேசன், மதன், லட்சுமிதேவி, தனலட்சுமி, லட்சுமணன், நிர்வாகிகள் தங்கம், வேலாயுதம், நல்லமுத்து, வேல்தங்கம், சுந்தர்ராஜ், சிக்கந்தர், பெருமாள், அனிதா மாரிமுத்து, அணி நிர்வாகிகள் பால்ராஜ், பாலகிருஷ்ணன், ஜெகன், அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *