தூத்துக்குடி திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவரும் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான கனிமொழி எம்்பி பிறந்த நாளை முன்னிட்டு ஆல்கன்டிரஸ்ட் சார்பில் 399வது வாரம் பிரையன்ட் நகர் வள்ளிநாயகபுரம் அடுத்துள்ள கோட்ஸ் நகர் பகுதியில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்.
நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெயராஜ், பேச்சிமுத்து, கமல், கேசவன், ஐய்யப்பன், கவுன்சிலர் வைதேகி, வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், மூக்கையா, மாநகர வா்த்தக அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டினாா்.


