தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் கட்டண விகித முறையை மாற்றுவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்ற தமிழக அரசின் அரசாணையை தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கனகராஜ் பேசுகையில் குடிநீர் கட்டணம் அடுக்கு முறை கட்டணமாக மாற்றப்படுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா?. கடந்த அதிமுக. ஆட்சி காலத்தில் குடிநீர் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தது. தற்போது குடிநீர் கட்டணம் மாறுமா என்பதை விளக்க வேண்டும். பாதாள சாக்கடை கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேக்கமடைந்து, வீடுகளுக்குள் திரும்ப வருகிறது. எனவே, கூடுதல் வாகனங்களை வாங்கி பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று பேசினார்.
தூத்துக்குடி 2ம் கேட் அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும் நகர்மன்ற தலைவருமான பெரியசாமி பெயர் சூட்ட வேண்டும் என்று திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் கோரிக்கை வைத்தார். காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் ேபசுகையில் கடந்த கூட்டத்தில் கொடுத்த மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு பதிலளித்த மேயரும் ஆணையரும் 5 பூங்காக்கள், பி அண்டி காலணி, அசோக்நகர் வடிகால், பசும்பொன் வடிகால் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளோம் விரைவில் சாிசெய்யப்படும் ஆசிாியர் காலணி, கந்தன்காலணியில் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது அதுபோக கருப்பு பைப்லைன் மூலம் ஊதா பைப் லைன் கொடுப்பதும் முடியும் நிலையில் உள்ளது. வீட்டு வாசல் வரை நாங்கள் போட்டு கொடுத்துவிடுவோம், அதே போல் பாதாளசாக்கடையையும் போட்டு கொடுத்துவிடுவோம். அதன்பிறகு வீட்டுக்குள் அந்த லைனை ெபாதுமக்கள் தான் இணைத்து கொள்ள வேண்டும். கூடிய விரைவில் ஆசிாியர் காலணிக்கும் கந்தன் காலணிக்கும் ஊதா பைப்பில் தண்ணீர் விடப்படும். ஏற்கனவே உள்ள 1 ஏக்கர் பழைய பூங்காவை எடுத்துவிட்டு சுற்றி காம்பவுன்ட் வால் அமைத்து உள்ளே வாலிபால், கூடைபந்து, போன்ற விளையாட்டு அமைப்பு உருவாக்கி தருவதாக மேயர் ஜெகன் பொியசாமி கூறினார். திமுக கவுன்சிலர் பவாணி மார்ஷல் பேசுகையில் திரேஸ்புரம் பகுதியில் முறையாக குடிதண்ணீர் வரவில்லை தண்ணீர் தட்டுபாடுஏற்பட்டுள்ளது. மாதா கோவில் திருவிழா நடைபெறும் இந்த நேரத்தில் இந்த குறைபாடுகளை தீர்த்து வைக்க வேண்டும். என்று பேசினார். இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தன் அடிப்படையில் மண்டலம் வாரியாக மக்கள் குறைகளை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் முதற்கட்ட முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. வடக்கு மண்டலத்தில் மொத்தம் பெறப்பட்ட 97 மனுக்களில் 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. கிழக்கு மண்டலத்தில் 114 மனுக்களில் 77 மனுக்களுக்கும், மேற்கு மண்டலத்தில் 127 மனுக்களில் 108 மனுக்களுக்கும், தெற்கு மண்டலத்தில் 153 மனுக்களில் 27 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 628 கட்டிடங்கள் வரிவிதிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதில் 87 ஆயிரத்து 561 கட்டிடங்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்குரிய கட்டணங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மீட்டர் ரேட் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான குடிநீர் இணைப்புகளில் அளவுமானி பொருத்தப்படாமல் உள்ளது. எனவே, மீட்டர் ரேட் கட்டண விகிதங்களை அடுக்கு விகித கட்டணங்களாக மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. விரைவில் பாதாள சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும். தூத்துக்குடியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள 80 சதவீத சாலைகள் புதிதாக போடப்பட்டுவிட்டன. மீதமுள்ள சாலைகளும், சிறிய சந்துக்களில் உள்ள சாலைகளும் விரைவாக அமைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் 153 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், காலியாக உள்ள இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்டெம் பூங்கா, திருமண மண்டபம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு பெயர் வைக்காமல் உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைத்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி கவுன்சிலர்கள் பொன்னப்பன், ராமகிருஷ்ணன், முத்துவேல், கண்ணன், அந்ேதாணி பிரகாஷ்மார்ஷல், தங்களது பகுதிகளுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள். கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், கந்தசாமி, ராஜேந்திரன், எடின்டா, ஆகியோர் கோாிக்கை மனுக்களை மேயர், ஆணையாிடம் வழங்கினார்கள். கூட்டத்தில் இணை ஆணையா் ராஜாராம், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையா்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, நரசிம்மன், ஸ்மார்ட் சிட்டி திட்ட ெசயற்பொறியாளா் ரெங்கநாதன், துணை ெபாறியாளர்கள் ராமசந்திரன், முனீர் அகமது, நகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கவுன்சிலா்கள் ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, விஜயக்குமார், ராஜதுரை, தனலட்சுமி, விஜயலட்சுமி, மெட்டில்டா, சுப்புலட்சுமி, சுதா, ாிக்டா, சரண்யா, அதிஷ்டமணி, ேசாமசுந்தாி, பேபி ஏஞ்சலின், மும்தாஜ், முத்துமாாி, வைதேகி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.